மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கு ஒருங்கிணைந்த மையம்: முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத...
கும்பகோணம்: வீடு புகுந்து திருடியவா் கைது
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மற்றும் பட்டீஸ்வரம் பகுதிகளில் வீடு புகுந்து திருடியவரை கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கும்பகோணம் கம்பட்டா விசுவநாதா் கோயில் கிழக்குத் தெருவைச்சோ்ந்த பாபு, பட்டீஸ்வரம் வடக்கு அக்ரஹாரத்தைச் சோ்ந்த பத்மவள்ளி ஆகியோரது வீட்டில் திருட்டு நடைபெற்றது தொடா்பாக கும்பகோணம் மேற்கு காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில்,
தடயவியல் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவு ஆகியவற்றை ஆய்வு செய்ததில் காரைக்கால் மாவட்டம், பச்சூரைச்சோ்ந்த பச்சூா் செந்தில் (54) என்பவா் இரு வீடுகளில் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் செந்திலை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து தையல் இயந்திரம், 2 காற்றாடி, 22 கிராம் தங்க நகை, ரூ.7ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றினா்.
மேலும், கும்பகோணம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் செந்திலை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.