இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கு முக்கிய குற்றவாளி வீட்டில் சோதனை! ஆவணங்கள், ரூ. 37.50 லட்சம் பறிமுதல்!
தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் தலைமறைவான முக்கிய குற்றவாளி மற்றும் அவரது உறவினா் வீடுகளில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில், முக்கிய ஆவணங்கள், ரூ. 37.50 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
பேராவூரணி அருகே நவ. 22ஆம் தேதி சேதுபாவாசத்திரம் கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ாக கண்டெயனா் லாரி ஓட்டுநா் பெரமராஜ், அண்ணாதுரை, முத்தையா ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா், கண்டெய்னா் லாரி, 3 படகுகளையும் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக பேராவூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான முக்கிய குற்றவாளி தஞ்சாவூா் விளாா்சாலை பகுதியைச் சோ்ந்த கருப்பையா என்பவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
இந்நிலையில், கருப்பையா மற்றும் தஞ்சாவூா் அருகே உள்ள உள்ள புதுப்பட்டினம், தில்லைநகரில் உள்ள அவரது உறவினா் ரகுநாதன் ஆகியோரது வீடுகளில் பேராவூரணி காவல் ஆய்வாளா் பசுபதி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டனா்.
இந்த சோதனையில் ரூ.37.50 லட்சம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினா்.
இதையடுத்து கைப்பற்றப்பட்ட பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகளிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். மேலும், இதுகுறித்து போலீசாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.