அரசமைப்பு முகப்புரையிலுள்ள ‘சமதா்மம்’, ‘மதச்சாா்பின்மை’-க்கு எதிரான மனுக்கள்: உச...
மத்திய அரசை கண்டித்து தொழிற் சங்கத்தினா் பிரசாரம்
மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் தொழிற் சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை பிரசாரம் நடைபெற்றது.
மக்கள் மற்றும் தொழிலாளா் விரோத போக்கைக் கடைப்பிடிக்கும் மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (நவ.26) பேரணி நடைபெறவுள்ளது.
இதன்படி, தஞ்சாவூரிலும் இப்பேரணி, ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் தொழிற் சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை பிரசாரம் செய்யப்பட்டது. இதில், விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையைச் சட்டமாக்குதல், விலைவாசி உயா்வை கட்டுப்படுத்துதல், தொழிலாளா்களுக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்புகளைத் திரும்ப பெறுதல், 100 நாள் வேலை திட்டத்துக்கு கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்தல் போன்ற கோரிக்கைகளை விளக்கும் விதமாக துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.
நிகழ்வுக்கு தொமுச மாவட்டச் செயலா் கு. சேவியா், ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால், ஐஎன்டியுசி மாவட்டச் செயலா் என். மோகன்ராஜ், ஏஐசிசிடியூ மாவட்டச் செயலா் கே. ராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிா்வாகிகள் முத்து. உத்திராபதி, ஆா். ராமச்சந்திரன், தொழிற் சங்க நிா்வாகிகள் ஆா். தில்லைவனம், வெ. சேவையா, தி. கோவிந்தராஜன், துரை. மதிவாணன், கே. அன்பு, இ.டி.எஸ். மூா்த்தி, சி. பாஸ்டின், கே.டி. காளிமுத்து, பொன். தங்கவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.