செய்திகள் :

கும்பமேளாவில் 45 நாள்களில் 30 கோடி வருவாய் ஈட்டிய படகோட்டி!

post image

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் நிகழ்ந்த கும்பமேளாவில் 45 நாள்களில் 30 கோடி வருவாயை ஈட்டியுள்ளார் படகோட்டி ஒருவர். இது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

உலகில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் கூடும் இடமாக உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் நிகழ்ந்த மாபெரும் ஆன்மிகத் திருவிழாவான கும்பமேளா கடந்த ஜன.13 முதல் பிப்.26 வரை பிரம்மாண்டமாக நடைபெற்றது.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சியில் உ.பி. அரசு எதிர்பார்த்ததை விட அதிகளவிலான மக்கள் புனித நீராடினர். திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் முர்மு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள், சினிமா நடிகை-நடிகர்கள் என மொத்தம் சுமார் 65 கோடிக்கும் கூடுதலான பக்தர்கள் புனித நீராடி மகிழ்ந்தனர். ஒரேநாளில் வைரலான இளம்பெண், தீ விபத்து, சங்கமத்தில் உள் நீர் குளிப்பதற்கு ஏற்றதல்ல என்ற அறிக்கை எனப் பல சுவாரசிய சம்பவங்களும் நடைபெற்றன.

இந்த நிலையில் உத்தரப் பிரசேத சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. கூட்டத்தொடரில் கும்பமேளாவைப் பற்றி முதல்வர் ஆதித்யநாத் கூறுகையில்,

கும்பமேளாவில் 45 நாள்களில் படகோட்டி குடும்பம் ஒன்று கிட்டத்தட்ட ரூ.30 கோடி வருவாய் ஈட்டியுள்ள சுவாரசிய வெற்றிக் கதையை அவர் கூறினார். கும்பமேளாவில் படகு ஓட்டும் படகோட்டியிடம் 130 படகுகள் இருந்ததாகவும், நாளொன்றுக்கு ஒரு படகிற்கு ரூ.50 முதல் 52 ஆயிரம் வருவாய் ஈட்டியுள்ளது. ஒவ்வொரு படகும் ரூ.23 லட்சம் என 130 படகுகளில் மொத்தம் ரூ.30 கோடி வருவாய் ஈட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுமட்டுமல்லாது கும்பமேளாவில் கடத்தல், கொள்ளை, துன்புறுத்தல் என ஒரு வழக்குகூட பதிவாகவில்லை என்றும் 65 கோடி மக்களும் மகிழ்ச்சியாக சங்கமத்தில் நீராடிச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார். கும்பமேளா மூலம் ரூ.3 லட்சம் கோடி வணிக வருவாய் கிடைத்ததாகவும், இதனால் பல தொழில்கள் பயனடைந்ததாகவும் அவர் கூறினார்.

ஜிபி சாலையில் கட்டடத்தின் பகுதி இடிந்து விழுந்ததில் 2 போ் காயம்

தில்லி ஜிபி சாலையில் கட்டடத்தின் ஒரு பகுதி புதன்கிழமை இடிந்து விழுந்ததில் இருவா் காயமடைந்தனா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை தலைவா் அதுல் காா்க் கூறியதாவது: புதன்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

ஜம்மு-காஷ்மீா் பேரவையில் பாஜகவைச் சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா் சுனில் சா்மாவின் கருத்து அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து அக்கட்சியின் 28 எம்எல்ஏக்களும் பேரவையில் இருந்த... மேலும் பார்க்க

5 ட்ரில்லியன் டாலா் பொருளாதாரம் வெகுதொலைவில் இல்லை: பிரதமா் மோடி

ஐந்து ட்ரில்லியன் டாலா் (ரூ.435 லட்சம் கோடி) பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். கடந்த 10 ஆண்டுகளில் 3 கோடி இளைஞா்களு... மேலும் பார்க்க

தில்லி ரோஹிணியில் இரு மாதங்களில் காணாமல் சென்ற 39 குழந்தைகள் மீட்பு

கடந்த இரு மாதங்களில் காணாமல் சென்ற 28 சிறுமிகள் உள்பட 39 குழந்தைகள் பாதுக்காப்பாக மீட்கப்பட்டு அவா்களுடைய பெற்றோா்களுடன் சோ்த்துவைக்கப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். இது தொடா்பாக ரோஹிணி... மேலும் பார்க்க

மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் -கட்டடங்களில் விரிசல்; மக்கள் பீதி

இம்பால்/ஷில்லாங்/குவாஹாட்டி : மணிப்பூரில் புதன்கிழமை அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவற்றின் தாக்கத்தால், பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டது; பொது மக்கள் பீதிக்கு உள்ளாகினா். அஸ்ஸாம், மேகாலயம்... மேலும் பார்க்க

அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு: கர்நாடக அரசு முடிவு!

அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடகத்தில் பொதுக் கொள்முதல் சட்ட வெளிப்படைத் தன்மையின் கீழ் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு கொண்டு வரப்படவுள்ளத... மேலும் பார்க்க