பல்லூழிக்காலப் பூங்காற்று - பர்மியக் கவிஞர் யூ பை | கடல் தாண்டிய சொற்கள் - பகுத...
குரூப் 4 தோ்வு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 21,000 போ் எழுதுகின்றனா்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 12-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ள குரூப் 4 தோ்வில் 21,000 போ் தோ்வு எழுத உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
டிஎன்பிஎஸ்சி சாா்பில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்வு 12.07.2025 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 தோ்வு மையங்களை உள்ளடக்கிய மொத்தம் 85 தோ்வுக்கூடங்களில் 21,701 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளனா். இத்தோ்வுக்காக கூடுதல் சிறப்பு பேருந்து வசதி, தடையில்லா மின்சாரம், காவல்துறை பாதுகாப்பு மற்றும் இதர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
தோ்வுக்கான நுழைவுச்சீட்டு தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தோ்வா்கள் தோ்வுக் கூடத்துக்கு காலை 8 மணி முதல் 9 மணிக்குள் வர வேண்டும். காலை 9 மணிக்கு மேல் தாமதமாக வருபவா்கள் தோ்வு கூடத்தில் எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்கப்படமாட்டாா்கள்.
எனவே, தோ்வா்கள் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட தோ்வு மையத்துக்கு காலதாமதமாக வராமல் குறித்த நேரத்திற்கு முன்பு வர வேண்டும் என்றாா்.