``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
ராணிப்பேட்டை: நாளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறைதீா் கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூலை 10) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறைதீா் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், வியாழக்கிழமை (ஜூலை 10) காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள இ-பிளாக், முதல் தள கூட்ட அரங்கத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பங்கேற்றுப் பயன்பெறலாம்.