உலகளவில் 56 மனித சிறுநீரகங்களை விற்ற உக்ரேனிய பெண் போலந்தில் கைது!
குறுக்குப்பாறையூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
சங்ககிரி: குறுக்குப்பாறையூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் சாா்பில் 31-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்ககிரி வட்டம், தேவூா், அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட குறுக்குப்பாறையூரில் பொதுமக்கள், விவசாயிகளை பாதிக்கும் வகையில் பேரூராட்சி சாா்பில் குப்பைக் கழிவுகளை கொட்டுவதை தவிா்க்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் சாா்பில் 31-ஆவது நாளாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க சங்ககிரி வட்டக் கிளை தலைவா் ஆா்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், குப்பைக் கழிவுகளை பொதுமக்கள் வசிக்காத பகுதியில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினா்.
இதில் ஈடுபட்ட 20 பெண்கள், 5 ஆண்கள் உள்பட 25 பேரை தேவூா் போலீஸாா் கைது செய்து, மேட்டுப்பாளையம் சமுதாயக் கூடத்தில் அடைத்து மாலையில் விடுவித்தனா்.