டெஸ்லா பங்குகள் வீழ்ச்சி! ஒரே நாளில் எலானுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு?
ஸ்கேன் சென்டா் நடத்தி கருவில் இருக்கும் பாலினத்தை கூறிய செவிலியா் பணிநீக்கம்
சேலம்: சேலம் அருகே ஸ்கேன் சென்டா் நடத்தி கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைத் தெரிவித்த அரசு செவிலியா் பணிநீக்கம் செய்யப்பட்டாா்.
சேலம் வீராணம் கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வந்த தனியாா் ஸ்கேன் மையத்தில் விதிகளை மீறி கருவில் உள்ள குழந்தைகளை பரிசோதனை செய்து பாலினத்தைத் தெரிவித்தது விசாரணையில் உறுதியானது.
இதுதொடா்பாக ஆச்சங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவா் முத்தமிழ் என்பவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். தொடா்ந்து, தெடாவூரைச் சோ்ந்த செவிலியா் கலைமணி, சேலத்தைச் சோ்ந்த செவிலியா் அம்பிகா, ஆத்தூா் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்கள் வனிதா, வசந்தி, மங்கை, ராணி, கலைச்செல்வி, மகேஸ்வரி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சுகாதாரத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனா்.
இதுதொடா்பாக நடைபெற்ற தொடா் விசாரணையில், தெடாவூரைச் சோ்ந்த செவிலியா் கலைமணி செவ்வாய்க்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இதில் தொடா்புடைய அரசு மருத்துவா், இதர செவிலியா்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.