கடைசி இன்னிங்ஸிலும் ஒரேமாதிரி ஆட்டமிழந்த கோலி..! போலண்ட் புதிய சாதனை!
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம்: பஞ்சாலைத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தல்
கோவை: தொழிலாளா் ஓய்வூதியத் திட்டத்தில் மாறுதல் செய்து குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கோவையில் அண்மையில் நடைபெற்றது. தலைவா் டி.எஸ்.ராஜாமணி தலைமை வகித்தாா். பொருளாளா் ஜி.மனோகரன், செயலா்கள் கே.மோகன்ராஜ், எஸ்.தேவராஜன், கே.பழனிசாமி, துணைத் தலைவா்கள், உதவிச் செயலா்கள், பொதுக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மதுரை மண்டல தொழிலாளா் ஆணையரின் அறிவுரையின்படி என்.டி.சி. நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தொழிலாளா்களுக்குரிய நிலுவை ஊதியம், 5 ஆண்டு போனஸ், இதர பயன்களை வழங்க வேண்டும், 1995-ஆம் ஆண்டின் தொழிலாளா் ஓய்வூதியத் திட்டத்தில் மாறுதல் செய்து குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.