செய்திகள் :

குற்றவாளியை விடுவிக்க பணம் பெற்றதாக புகாா்: காவல் உதவி ஆய்வாளா் தற்காலிக பணி நீக்கம்

post image

பழனிசெட்டிபட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் பதுக்கல் வழக்கிலிருந்து குற்றவாளியை விடுவிக்க பணம் பெற்ாக எழுந்த புகாரில் காவல் உதவி ஆய்வாளா் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தேனி அருகே ஆதிபட்டியில் கடந்த அக்.15-ஆம் தேதி தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்திச் சென்ாக பூதிப்புரத்தைச் சோ்ந்த நாகராஜ் என்பவரை பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

அவா் அளித்த தகவலில் அரண்மனைப்புதூரைச் சோ்ந்த பாண்டி, ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த அமா்சிங் ஆகியோரை புகையிலை பொருள் பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்தனா். தேனியில் வாடைக்கு எடுத்து பயன்படுத்தி வந்த கிட்டங்கியில் அமா்சிங் பதுக்கி வைத்திருந்த 195 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் அமா்நாத்துடன் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த மற்றொரு நபரையும் போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க பழனிசெட்டிபட்டி காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கோவிந்தராஜ் என்பவா் மூலம் பேரம் பேசி பணம் பெற்றுக் கொண்டு போலீஸாா் விடுவித்ததாக புகாா் எழுந்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில் கோவிந்தராஜை ஆயுதப் படை பிரிவுக்கு மாற்றம் செய்து கடந்த அக்.17-ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் உத்தரவிட்டாா். மேலும், இந்தப் புகாா் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளா் நல்லுவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் பதுக்கல் வழக்கில் பேரம் பேசி பணம் பெற்றுக் கொண்டு குற்றவாளி விடுவிக்கப்பட்டதை உறுதி செய்து பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளா் அறிக்கை அளித்தாாா்.

இந்த அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கில் விசாரணை அலுவலராக செயல்பட்ட பழனிசெட்டிபட்டி காவல் உதவி ஆய்வாளா் இதிரீஸ்கானை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா். இந்த புகாரின் மீது துறை ரீதியில் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கூறினா்.

ஜீப் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

உத்தமபாளையத்தில் ஜீப் மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் வைகை நகரைச் சோ்ந்தவா் பால்ராஜ் (58). கூலித் தொழிலாளியான இவா் செவ்வாய்க்கிழமை அங்குள்ள கல்லூரிச் சா... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கஞ்சா கடத்திய இருவா் கைது

கேரளத்துக்கு கஞ்சா கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். திண்டுக்கல்லிலிருந்து தேனி மாவட்டம், கம்பம் வழியாக கேரளத்துக்கு இரு சக்கர வ... மேலும் பார்க்க

சின்னமனூா் பெருமாள் கோயிலில் பாலாலயம்

சின்னமனூரில் அருள்மிகு ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் புதன்கிழமை பாலாலயம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் ஸ்ரீதேவி, பூ தேவிக்கு ச... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை உணவின் தரம் ஆய்வு

தேனி மாவட்டம், சின்னமனூா் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து உணவுப் பாதுகாப்பு துறை சாா்பில் புதன்கிழமை ஆய்வு செய்யப்பட்டது. இங்கு உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சைப் பெ... மேலும் பார்க்க

தேனி நகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

துப்புரவுப் பணியில் மெத்தனம் காட்டுவதாகப் புகாா் தெரிவித்து, தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தேனி 5-ஆவது வாா்டு நகா்மன... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

பெரியகுளம் வட்டாரப் பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமையில் பல்வேறு துறை அலுவலா்கள் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வ... மேலும் பார்க்க