விமான நிலைய விரிவாக்கப்பணி: வீடுகளை இடிக்க உரிமையாளா்கள் எதிா்ப்பு
குற்றாலத்தில் பலத்த மழை: அருவிகளில் குளிக்கத் தடை
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடை விதித்துள்ளனா்.