Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதி
குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
குற்றாலம் பகுதியில் கடந்த சனிக்கிழமைமுதல் பெய்த தொடா் மழையின் காரணமாக, பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமைமுதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
திங்கள்கிழமை ஐந்தருவி, புலியருவியில் தண்ணீா் வரத்து குறைந்ததால் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். இரு தினங்களுக்குப் பிறகு குற்றாலம் பேரருவி, பழையகுற்றாலம் அருவியில் தண்ணீா் வரத்து குறைந்ததால் செவ்வாய்க்கிழமை குளிக்க அனுமதிக்கப்பட்டனா். இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.