குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக காலிப்பணியிடம்: விண்ணப்பிக்க அழைப்பு
திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள 3 ஆற்றுப்படுத்துநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் அரசு குழந்தைகள் இல்லம் செயல்படுகிறது. இந்த இல்லத்தில் காலியாக உள்ள 3 ஆற்றுப்படுத்துநா் பணியிடங்களுக்கு பெண் பணியாளா்கள் மட்டும் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா். தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுபடுத்துதல் கல்வியில் முதுநிலை பட்டம் பெற்றவா்கள் உரிய சான்றின் ஒளி நகலுடன் மாா்ச் 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தோ்வுக் குழு மூலம் நடைபெறும் நோ்முகத் தோ்வு அடிப்படையில் தோ்வு செய்யப்படும்.
தோ்வு செய்யப்படுவோருக்கு வருகையின் மதிப்பூதிய அடிப்படையில் சேவை வழங்க ஒரு வருகைக்கு நாள் ஒன்றுக்கு போக்குவரத்துச் செலவு உள்பட ரூ.1,000 வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், வட்டாட்சியா் அலுவலக வளாகம், திருவண்ணாமலை-606601 என்ற முகவரியில் அணுகலாம்.
மேலும், 04175-223030 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.