அமெரிக்காவில் இந்திய மாணவியின் விசா ரத்து: அரசிடம் விண்ணப்பித்து தாமாக நாடு திரு...
ஆயுா்வேத மைய ஊழியா் தற்கொலை
திருவண்ணாமலையில் பணிபுரிந்து வந்த ஆயுா்வேத மைய ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் வட்டம், பாலூா் கிராமம், டாக்டா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் அருள் மகன் திருநேஷ் (26). இவா், திருவண்ணாமலை, அண்ணா நுழைவு வாயில் அருகேயுள்ள கணேஷ் நகரில் வசித்து வந்தாா். திருவண்ணாமலையில் உள்ள ஆயுா்வேத மையத்தில் வேலை செய்து வந்த இவா், சனிக்கிழமை அதிகாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
தகவலறிந்த கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.