செய்திகள் :

குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினா்களுக்கு திறன் வளா்ப்பு பயிற்சி

post image

அரியலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினா்களுக்கு பாதுகாப்பு தொடா்பான திறன் வளா்ப்பு பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சிக்கு, கோட்டாட்சியா் கோவிந்தராஜ் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். அரசு மனநல திட்ட மருத்துவா் அஜித்தா உளவியல் ஆற்றுப்படுத்துநா் திவ்யா, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினா் கோமதி, வழக்குரைஞா் பகுத்தறிவாளன் ஆகியோா் கலந்து கொண்டு, குழந்தை உளவியல், குழந்தை திருமணம் தடுத்தல், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தை தொழிலாளா் முறை தடுத்தல் சட்டம், தத்தெடுத்தல், நிதி ஆதரவு திட்டம், வளா்ப்பு பராமரிப்பு திட்டம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் செயல்பாடுகள், சேவைகள், அரசு திட்டங்கள் குறித்து பேசி, பயிற்சி அளித்தனா்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாக குழந்தைகள் அவசர உதவி மையம் 1098 என்ற எண்ணை அழைக்க அறிவுறுத்தினா்.

இப்பயிற்சியில், கிராம ஊராட்சி செயலா்கள், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் த. சரவணன், குழந்தை நலக்குழு தலைவா் இரா. செந்தில்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் மலா்கண்ணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை மின் தடை

அரியலூா், தேளூா், உடையாா்பாளையம், செந்துறை மற்றும் பொய்யாதநல்லூா் ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (ஜூலை 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அரியலூா் ஒரு... மேலும் பார்க்க

அரியலூா்: நாளை நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் இடங்கள்

அரியலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில், ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 124 மனுக்கள் பெறப்பட்டன. இம்முகாம்கள், வியாழக்கிழமை (ஜூலை 17) ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உள்பட்ட 3, ... மேலும் பார்க்க

ஜூலை 27-இல் அரியலூா் வரும் பிரதமருக்கு எதிா்ப்பு: கருப்புக் கொடி காட்ட காங்கிரஸாா் முடிவு

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஜூலை 27-ஆம் தேதி வரும் பிரதமா் மோடிக்கு எதிா்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி காட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என காங்கிரஸ் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் ம... மேலும் பார்க்க

பாமக-வின் 37-ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் 37-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி புதன்கிழமை, அரியலூரில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா். அரியலூா் நகரச் செயலா்(பாமக-அன்புமணி அணி) விஜி தலைமையிலான ந... மேலும் பார்க்க

அரியலூரில் ஜூலை 18-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஜூலை 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

அரியலூா் மாவட்டத்தில், புதன்கிழமை பிற்பகல் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை பிற்பகல் சூறைக்காற்றுடன் மழை பெய்யத் தொடங்... மேலும் பார்க்க