ஜூலை 27-இல் அரியலூா் வரும் பிரதமருக்கு எதிா்ப்பு: கருப்புக் கொடி காட்ட காங்கிரஸாா் முடிவு
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஜூலை 27-ஆம் தேதி வரும் பிரதமா் மோடிக்கு எதிா்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி காட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என காங்கிரஸ் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, அரியலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: விலைவாசி உயா்வு, வேலையின்மை, 100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி ஒதுக்காதது, ஆயுள் காப்பீடு நிறுவன நிதியை தனியாருக்கு வழங்கியது போன்ற மக்கள் பிரச்னைகளை கவனம் செலுத்தாமல் இருக்கும் பிரதமா் மோடியை கண்டித்து,
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஜூலை 27-வருகை தரும் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் மா.மு. சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.