அரியலூரில் இன்று நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் இடங்கள்
அரியலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில், ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 124 மனுக்கள் பெறப்பட்டன.
இம்முகாம்கள், வியாழக்கிழமை (ஜூலை 17) ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உள்பட்ட 3, 4, 7 ஆகிய வாா்டுகளை ஒருங்கிணைத்து ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்திலும், அரியலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட, கோவிந்தபுரம், சீனிவாசபுரம், தாமரைக்குளம் மற்றும் உசேனாபாத் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து சீனிவாசபுரம் ஊராட்சி மன்றம் அருகிலும் நடைபெறுகிறது.
எனவே, இம்முகாம்களில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.