பாமக-வின் 37-ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் 37-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி புதன்கிழமை, அரியலூரில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.
அரியலூா் நகரச் செயலா்(பாமக-அன்புமணி அணி) விஜி தலைமையிலான நிா்வாகிகள், அண்ணா சிலையில் இருந்து ஊா்வலமாகச் சென்று, செட்டி ஏரிக்கரையிலுள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
பின்னா், அவா்கள் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினா்.
இதே போல் மருத்துவா் ராமதாஸ் அணியினரும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.