அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை
அரியலூா் மாவட்டத்தில், புதன்கிழமை பிற்பகல் பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை பிற்பகல் சூறைக்காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.
இதில் அரியலூா், ஜெயங்கொண்டம், திருமானூா் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பெய்தது. மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளிா்ந்த சீதோஷன நிலை காணப்பட்டது.