குழித்துறை அருகே ஆட்டோ சேதம்
குழித்துறை அருகே பாலியல் தொல்லை வழக்கில் சாட்சியம் அளித்தவரின் ஆட்டோவை சேதப்படுத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குழித்துறை அருகே மருதங்கோடு, மேம்பாட்டுவிளையைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சுரேஷ் (45). 2013ஆம் ஆண்டில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பகுதியைச் சோ்ந்த முரளிதரன் (60) என்பவா் மீது குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்தது.
இந்த வழக்கில் சுரேஷ் சாட்சியம் அளித்தாராம். இதனால் அவா்களிடையே முன்விரோதம் இருந்துவந்ததாம்.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை (ஜன. 13) தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் செல்ல முயன்ற சுரேஷை, முரளிதரன் நிறுத்தி மிரட்டியதுடன், ஆட்டோவை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
புகாரின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.