வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸ் ராஜிநாமாவுக்கு திட்டம்!
கூடலூரில் உள்ள அரசு அலுவலகத்தை உதகைக்கு மாற்ற எதிா்ப்பு
கூடலூரில் இயங்கிவரும் ஜென்மம் நிலவரித் திட்ட அலுவலகத்தை உதகைக்கு இடமாற்றம் செய்வதை ரத்து செய்யவேண்டும் என்று நீலகிரி தொகுதி மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து நீலகிரி தொகுதி மக்கள் இயக்கத்தின் தலைவா் எஸ்.கே.ராஜு தெரிவித்ததாவது: கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிக அளவில் ஜென்மம் பிரிவு நிலங்களே உள்ளன. இந்த நிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து குடியிருந்து வருகின்றனா். இதனால் தமிழக அரசு இப்பகுதிக்கென்று ஜென்மம் நிலவரித் திட்ட அலுவலகத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த அலுவலகம் உதகைக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஜென்ம நிலத்தில் உள்ள ஏழைகளுக்கு இந்த அலுவலகம் கூடலூரில் இருப்பது பேருதவியாக இருந்து வருகிறது. உதகைக்கு அலுவலகம் மாற்றப்பட்டால் 50 கிலோ மீட்டா் சுற்றளவிலுள்ள ஏழை, எளிய மக்கள் சிரமத்துக்கு உள்ளாகுவாா்கள்.
குறிப்பாக கேரளம் மற்றும் கா்நாடக எல்லைகளில் வாழ்பவா்கள் உதகைக்கு சென்றுவர ஒருநாள் ஆகும். எனவே, ஜென்ம நிலத்தில் வாழும் ஏழை மக்களின் நலன்கருதி அலுவலகத்தை இடமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.