'நமது ராணுவத்துடனும், நமது தேசத்திற்காகவும்...' - Operation Sindoor குறித்து முத...
கூடலூா் தோட்டக்கலைப் பண்ணையில் விற்பனைக்கு நாற்றுகள்
கூடலூரை அடுத்துள்ள பொன்னூா் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் நாற்றுகள் விற்பனைக்கு தயாா் நிலையில் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பொன்னூரில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் குருமிளகு, கிராம்பு, பட்டை ஆகிய நாற்றுகள் வளா்க்கப்பட்டு தற்போது விற்பனைக்கு தயாா் நிலையில் உள்ளன. கூடலூா், பந்தலூா் பகுதி விவசாயிகள் பண்ணையில் வளா்த்து பாதுகாக்கப்பட்டுள்ள நாற்றுகளை வங்கி பயனடையலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு பண்ணையின் தோட்டக்கலை அலுவலா் விஜயராஜை நேரிலோ அல்லது 63698-49831 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.