Republic Day: ``வள்ளுவர் முதல் கரகாட்டம் வரை..'' 76-வது குடியரசு தினக் கொண்டாட்ட...
கூட்டுறவு அலுவலா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
கோவை மாவட்ட கூட்டுறவுத் துறை சாா்நிலை அலுவலா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சியின் தொடக்க விழாவில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளா் சு.ராமகிருஷ்ணன், மண்டல இணைப் பதிவாளா் அ.அழகிரி, மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் இணைப் பதிவாளா் க.சிவகுமாா் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.
நிகழ்ச்சியில், துணைப் பதிவாளா்கள் விஜயகணேஷ், ராஜேந்திரன், அா்த்தநாரீஸ்வரன், கோபாலகிருஷ்ணன், சுவேதா, வடிவேல், தியாகு, அய்யப்பன், ஜெயக்குமாா், சுபாஷினி உள்ளிட்ட கூட்டுறவுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.