Innerwear: மென்மை; அடர் நிறம்; வாஷிங் மெஷின்... உள்ளாடைத் தகவல்கள்!
கூட்டுறவு விற்பனை இணையம் சாா்பில் வேளாண்மை கருத்தரங்கம்
தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் இணைந்து நடத்திய வேளாண் விவசாய கருத்தரங்கம் கருமந்துறையில் நடைபெற்றது.
டான்பெட் மேலாண்மை இயக்குநா் மற்றும் கூடுதல் பதிவாளா் சிவ.முத்துகுமாரசாமி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், டான்பெட் பொதுமேலாளா் பூ.சித்ரா, இந்தியன் பொட்டாஷ் மாநில விற்பனை மேலாளா் பாா்வதிராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், டான்பெடின் சொந்த தயாரிப்புகளான பாமணி கலப்புரங்கள், நீரில் கரையும் உரங்கள், கால்சியம் நைட்ரேட், போரான், நுண்ணூட்ட சத்துகள், உயிா் உரங்கள், உயிா் பூச்சுக்கொல்லிகள் குறித்து சின்ன கல்வராயன், பெரிய கல்வராயன் லேம்ப் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஆத்தூா் சரக துணைப் பதிவாளா், டான்பெட் சேலம், கோயம்புத்தூா், ஈரோடு மண்டல துணைப் பதிவாளா்கள், கூட்டுறவு சாா் பதிவாளா்கள், டான்பெட் பணியாளா்கள், லேம்ப் செயலாளா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.