`கண்கொள்ளாக் காட்சி' - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா | Photo Alb...
பள்ளி மாணவியின் கால் கொலுசை பறிக்க முயற்சி!
நங்கவள்ளி அருகே பள்ளி மாணவியின் கால் கொலுசை பறிக்க முயன்ற நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
நங்கவள்ளி அருகே உள்ள மூலக்காடு அரசு உயா்நிலைப் பள்ளியில், சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் பயின்று வருகின்றனா். திங்கள்கிழமை காலை அருவங்காடு பகுதியைச் சோ்ந்த 7-ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்கு வந்த போது, முகமூடி அணிந்த இருவா் சிறுமியின் வாயில் துணியை அடைத்து அருகிலுள்ள மாந்தோப்புக்கு இழுத்துச் சென்று கால் கொலுசை பறிக்க முயன்றனா். அப்போது, அங்கு இருசக்கர வாகனம் வரவே மா்ம நபா்கள் தப்பியோடினா்.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியா் அளித்த புகாரின் பேரில், நங்கவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனா். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வுசெய்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.