விருத்தாசலம் - சேலம் ரயில் பிப்.12 சேலம் நகரம் வரை மட்டுமே இயங்கும்!
விருத்தாசலத்தில் இருந்து சேலம் சந்திப்பு ரயில் நிலையம் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் புதன்கிழமை (பிப். 12) சேலம் நகர ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம், செவ்வாய்ப்பேட்டை மாா்க்கெட் ரயில் நிலைய இருப்பு பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், விருத்தாசலம் - சேலம் இடையிலான பயணிகள் ரயில் விருத்தாசலத்தில் மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு சேலம் சந்திப்பு ரயில் நிலையம் வந்தடைவதற்கு பதிலாக, ஒரு நாள் மட்டும் சேலம் நகர ரயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும். இந்த ரயிலானது, நகர ரயில் நிலையத்தில் இருந்து சேலம் சந்திப்பு வரை இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.