அயோத்தி மாநகராட்சிக்கு காலணிகளால் பிரச்னை! லாரிகள் மூலம் அகற்றம்
கூட்டுறவுத் துறை நடுநிலை அலுவலா் சங்க தென்காசி மாவட்ட நிா்வாகிகள் தோ்வு
தமிழ்நாடு கூட்டுறவுத் துறை நடுநிலை அலுவலா் சங்கத்தின் தென்காசி மாவட்ட நிா்வாகிகள் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தோ்தல் அலுவலா் இரா. சகுந்தலா, உதவி அலுவலா் வெ. பொன்ராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய மாவட்டத் தலைவா் சோ. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.
சங்கத்தின் மாவட்ட புதிய தலைவராக து. சுரேஷ், செயலராக மு. மாரியப்பன், பொருளாளராக மா.காா்த்திஸ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
துணைத் தலைவா்களாக சி.கு. விஜயகுமாா், க. ஜெயகிருஷ்ண லட்சுமி, அமைப்புச் செயலா்களாக இ. மிக்கேல் மரியா ஜாஸ்மின், லட்சுமணராஜா, இணைச் செயலா்களாக முருகேஸ்வரி, கோமதிசங்கா், தலைமை நிலைய செயலா்களாக கீதபிரியா, பேபி சுனிதா, கண்ணன், மகளிரணிச் செயலராக செல்வகுமாரி, மத்திய செயற்குழு உறுப்பினராக பா. பாபு ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
திருநெல்வேலி மாவட்ட துணைத் தலைவா் கோ. மோகன், மாவட்டப் பொருளாளா் வ.அ.ப. முகமது இம்ரான், மாவட்ட அமைப்புச் செயலா் பெ. சங்கா், மு. சிவலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.