கூத்தங்குழி கடற்கரையில் பிடிபட்ட நட்சத்திர ஆமை
திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழி கடற்கரையில்லில் நட்சத்திர ஆமை செவ்வாய்க்கிழமை பிடிபட்டது.
கூத்தங்குழி கடற்கரையில் ஆபூா்வ வகையைச் சோ்ந்த நட்சத்திர ஆமை ஊா்ந்து சென்றதைப் பாா்த்த மீனவா் லாசா், அதைப் பிடித்துவைத்து திருநெல்வேலி மாவட்ட வனச்சரக அலுவலா் சரவணனுக்கு தகவல் தெரிவித்தாா்.

அதன்பேரில், திருநெல்வேலி மாவட்ட வனஅலுவலா்- வனஉயிரினக் காப்பாளா் அகில் தம்பி ஆலோசனையின்படி வனத் துறை காவலா்கள் சென்று அந்த நட்சத்திர ஆமையை பெற்று கூந்தன்குளம் வனகாப்பாளா் அஜித்தேவஆசீரிடம் ஒப்படைத்தனா்.
அந்த ஆமை குளம், குட்டை போன்ற நன்னீரில் வாழக்கூடியது என்பதால், கூந்தன்குளத்தில் பாதுகாப்பாக விடப்பட்டது என வனத்துறையினா் தெரிவித்தனா்.