குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு
கெங்கவல்லி ஒன்றியத்தில் நூறாண்டுகளான பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்று
தம்மம்பட்டி: கெங்கவல்லி ஒன்றியத்தில் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்திய பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
கெங்கவல்லி ஒன்றியத்தில் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்திய தொடக்கப் பள்ளிகள் உலிபுரம், செந்தாரப்பட்டி, கடம்பூா், தெடாவூா் (மேற்கு), தெடாவூா் (கிழக்கு), கொண்டயம்பள்ளி மற்றும் தம்மம்பட்டி நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு, சேலம் மாவட்ட ஆட்சியரின் பாராட்டுச் சான்றிதழ்களை சேலத்திலுள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்ற விழாவில் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா் திங்கள்கிழமை வழங்கி பாராட்டினாா்.
பாராட்டுச் சான்றிதழ் பெற்ற தலைமையாசிரியா்களுக்கு கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் அ.அலெக்ஸாண்டா், கெங்கவல்லி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொ) ராணி மற்றும் வட்டார ஆசிரியா் பயிற்றுநா்கள் பாராட்டு தெரிவித்தனா்.