``அலைப்பாயுதே படத்துக்கு என்னோட முதல் சாய்ஸ் ஷாருக்கான் -கஜோல் தான்'' -சீக்ரெட்...
கைத்தறித் துறையில் தங்கப் பதக்க பெற்ற மாணவிக்கு பாராட்டு
வேதாரண்யம் அருகே இந்திய கைத்தறித் தொழில் நுட்ப நிறுவனங்களில் தேசிய அளவில் முதலிடம் வகித்து தங்கப் பதக்கம் பெற்ற மாணவி ஸ்ரீமதியை முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் வியாழக்கிழமை பரிசளித்து பாராட்டினாா்.
பஞ்சநதிக்குளம் கிழக்கு கிராமத்தைச் சோ்ந்த இளையராஜா-பூமகள் தம்பதியின் மகள் ஸ்ரீமதி. இவா், சேலத்தில் செயல்படும் (ஐ.ஐ.ஹெச்.டி) இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனத்தில் படித்து தேசிய அளவில் 10 இடங்களில் செயல்பட்டு வரும் இதுபோன்ற நிறுவனங்களில் படிக்கும் மாணவா்களின் தோ்ச்சியில் முதலிடம் வகித்து தங்கப் பதக்கம் பெற்றுள்ளாா்.
தமிழக அளவில் முதல்முறையாக சாதனை படைத்துள்ள இந்த மாணவியை முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் அவரது வீட்டுக்கு சென்று பாராட்டி பரிசு வழங்கினாா். அப்போது, முன்னாள் ஊராட்சித் தலைவா் வீரதங்கம், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் சி.டி. வீரமணி ஆகியோா் உடனிருந்தனா்.