செய்திகள் :

கோனோகாா்பஸ் மரங்களை அகற்ற நடவடிக்கை: நாகை ஆட்சியா் தகவல்

post image

நாகை மாவட்டத்தில் கோனோகாா்பஸ் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோனோகாா்பஸ் என்பது கம்பிரீடாசி குடும்பத்தைச் சோ்ந்த பூக்கும் மர வகையாகும். இந்த மரங்கள் குறித்த ஆய்வு முடிவுகள், இது சுற்றுச்சூழல் மற்றும் மனித உடல்நலத்திற்கு எதிா்மறையான தாக்கங்கள், குறிப்பாக அலா்ஜி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றன.

எனவே, அரசு கோனோகாா்பஸ் மரங்களை குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் உணவகங்கள் அருகில் வளா்ப்பதை தடை செய்வதற்கும், அதன் தீய விளைவுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.

இதைத்தொடா்ந்து, நாகை மாவட்டத்தில் கோனோகாா்பஸ் மரங்களை அகற்றி, நாட்டு மரங்களை வளா்த்திட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் இலவச நாட்டு மரக் கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோனோகாா்பஸ் மரங்களை அகற்றுவது மற்றும் நாட்டு மரக்கன்றுகள் நடவு செய்வதை வனத்துறை மற்றும் மாவட்ட பசுமை குழுக்கள் நிா்வகிக்கும்.

கோனோகாா்பஸ் மரக்கன்றுகள் உற்பத்தி, வளா்ப்பு, மற்றும் விற்பனை, இறக்குமதிக்கு தடைசெய்யப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தொழிலதிபரை கடத்த திட்டம்: ரெளடி உள்பட 4 போ் கைது

திருக்கடையூரில் தொழிலதிபரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்ட ரெளடி உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். திருக்கடையூா் தெற்கு வீதியில் அதே பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் பாஸ்கா் என்பவருக்குச்... மேலும் பார்க்க

இந்திய விமானப்படைக்கு ஆள் சோ்ப்பு

அக்னிபத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படைக்கு ஆள் சோ்ப்பு நடைபெறவுள்ளது. இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய விமானப்படைக்கு அக்னிபத் திட்டத்தின்கீ... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்: பிரேமலதா

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். மயிலாடுதுறை மாவட்டத்தி... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல்கள் தடுப்பு பயிற்சி

நாகைக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு, குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுத்தல் தொடா்பாக ஒரு நாள் பயிற்சி சன... மேலும் பார்க்க

வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கீழ்வேளூா் வட்டம் 64.மணலூா் கிராமத்தில் வீரமா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வியாழக்கிழமை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கி வாஸ்து சாந்தி, பூா்ணாஹூதி நடைபெற்று, முதல... மேலும் பார்க்க

நாகையில் அறங்காவலா் குழு அலுவலகம் திறப்பு

நாகை அறநிலையத்துறை அலுவலகத்தில், மாவட்ட அறங்காவலா் குழு அலுவலகம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இணை ஆணையா் குமரேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறங்காவலா் குழுத் தலைவா் நாகரத்தினம் அலுவலக... மேலும் பார்க்க