சாத்தூர்: '7 வயது பேத்திக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர்' - போக்சோவில் கைது
பாலியல் துன்புறுத்தல்கள் தடுப்பு பயிற்சி
நாகைக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு, குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுத்தல் தொடா்பாக ஒரு நாள் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நாகை காளியம்மன் சந்நிதி நகராட்சியில் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சிக்கு வட்டார வளமைய மேற்பாா்வையாளா் வ. முருகன் தலைமை வகித்தாா்.
பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியா்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு கள ஆய்வாளா் ஜெனோவா செல்வி, அனைத்து மகளிா் காவல் நிலைய காவல் ஆய்வாளா் வேம்பரசி ஆகியோா், பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து மாணவா்கள் எப்படி தங்களை காத்துக் கொள்வது குறித்து என ஆலோசனைகளை வழங்கினா்.
கருத்தாளா்களாக ஆசிரியா் பயிற்றுநா் சி. பிரபு அக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியை சுகி , நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை ரேகா ஆகியோா் செயல்பட்டனா்.