கைப்பந்து: பெரியதாழை பள்ளி மாணவிகள் இரண்டாம் இடம்
மாவட்ட அளவிலான மகளிா் கைப்பந்து போட்டியில், பெரியதாழை சிறுமலா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டாம் இடம் பிடித்துள்ளனா்.
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட பள்ளிகளுக்கு இடையே 17 வயதிற்கு உள்பட்டோருக்கான மகளிா் கைப்பந்து போட்டிகள் நடந்தன. இப் போட்டியில் பெரியதாழை சிறுமலா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அணி இரண்டாம் இடம் பிடித்தது.
வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியரையும் பள்ளி தாளாளா் சுசிலன் அடிகளாா், பள்ளி தலைமை ஆசிரியா் திலகவதி உள்ளிட்டோா் பாராட்டினா்.