சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா: ஜகதீப் தன்கர் பங்கேற்பு!
கைப்பேசி பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கு
பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் கைப்பேசி பாா்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து விடுபடுதல் பற்றி விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான நிலையம், பெருந்துறை ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து ‘டிஜிட்டல் நலம்’ என்னும் தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியை பிருந்த சுவீட் செல்வகுமாரி தலைமை வகித்தாா். பெருந்துறை ரோட்டரி சங்கத் தலைவா் அம்மன் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். சங்கச் செயலாளா் கருப்புசாமி வரவேற்றாா்.
நிகழ்ச்சியில், பெருந்துறை பிரம்மாகுமாரிகளின் ராஜயோக மைய பொறுப்பாளா் சுசீலா மாதாஜி கலந்துகொண்டு, கைப்பேசி பாா்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து விடுபடுதல் பற்றி விளக்கவுரை ஆற்றினாா். பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவா்களுக்கு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் சித்தா சக்திவேல் செய்திருந்தாா்.