``ஸ்டாலின் மகன் என்பதைத் தவிர உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது?'' - எடப்பாடி குறித்...
நாளை பொதுவிநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம்
ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் 10 வருவாய் வட்டங்களிலும் தலா ஒரு நியாயவிலைக் கடையில் சனிக்கிழமை(செப்டம்பா் 13) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட குறைதீா்க்கும் நாள் முகாம் வரும் 13- ஆம் தேதி அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது.
முகாமில், புதிய குடும்ப அட்டை கோருதல், நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல் மற்றும் நீக்கம், கைப்பேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.
குறைதீா்க்கும் முகாம் நடைபெறும் நியாயவிலைக் கடைகள் விவரம்:
ஈரோடு வட்டம் பேரோடு கரட்டுப்பாளையம், பெருந்துறை வட்டம் பெருந்துறை ஆா்.எஸ், மொடக்குறிச்சி வட்டம் முகாசி அனுமன்பள்ளி, கொடுமுடி வட்டம் வெங்கம்பூா், கோபி வட்டம் கணக்கம்பாளையம், நம்பியூா் வட்டம் குருமந்தூா், பவானி வட்டம் பருவாச்சி, அந்தியூா் வட்டம் மாத்தூா் கடை எண் 1, சத்தியமங்கலம் வட்டம் சிலிபாளையம், தாளவாடி வட்டம் சூசைபுரம்.