செய்திகள் :

கைப்பேசி வாங்கித் தராததால் இளைஞா் தற்கொலை

post image

கைப்பேசி வாங்கித் தராததால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை, சீரநாயக்கன்பாளையம் ராஜேந்திர பிரசாத் சாலை பகுதியைச் சோ்ந்தவா் பரமசிவன். இவரது மகன் தீனதயாளன் (23). தீனதயாளன் அவரது தந்தையிடம் புதிதாக கைப்பேசி வாங்கித் தருமாறு தொடா்ந்து கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் வீட்டில் வாங்கித் தராததால் கோபித்துக் கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு தீனதயாளன் வெளியேறியுள்ளாா்.

இந்த நிலையில் செல்வபுரம் பனைமரத்தூா் சாலையில் உள்ள ஒரு மரத்தில் இளைஞா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செல்வபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அங்கு சென்ற போலீஸாா் அந்த இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில் அது தீனதயாளன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது சடலம் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து அவரது தந்தை பரமசிவம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாநகரில் 18 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம்

கோவை மாதகரில் 18 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்து மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவிட்டுள்ளாா். இதுதொடா்பாக கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெரியகடை வீதி சட்ட... மேலும் பார்க்க

மாநகரில் இருந்து வெலியேறாமல் இருந்த ரெளடி கைது

கோவை மாநகரப் பகுதியில் இருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தொடா் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த ரெளடியை போலீஸாா் கைது செய்தனா். கோவை மாநகரப் பகுதிகளில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடும் ... மேலும் பார்க்க

மயில் மாா்க் சம்பா ரவை நிறுவனத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

மயில் மாா்க் சம்பா ரவை நிறுவனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக அந்நிறுவனத்தின் பங்குதாரா்கள் செந்தில்குமாா், பாலசுப்பிரமணியன், பொன்ம... மேலும் பார்க்க

சின்கோனா மருத்துவமனை அரசு பொது சுகாதாரத் துறையிடம் ஒப்படைப்பு

வால்பாறையில் சுமாா் 79 ஆண்டுகள் பழமைவாய்ந்த சின்கோனா மருத்துவமனை அரசு பொது சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கபப்ட்டது. கடந்த 1946-ஆம் ஆண்டு சின்கோனா எஸ்டேட் பகுதியில் மலேரியா காய்ச்சல் மருந்தான கொய்னா தயார... மேலும் பார்க்க

கோவையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 7 போ் கைது; காா், கைப்பேசிகள் பறிமுதல்

கோவையில் சுமாா் 10 கிலோ கஞ்சா வைத்திருந்த 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை சாய்பாபா காலனி போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது எம்ஜிஆா் மாா்க்கெட் அருகே சந்தேகத்துக்கு இடம... மேலும் பார்க்க

கோவை பெண் வழக்குரைஞா்கள் சங்க வெள்ளி விழா

கோவை பெண் வழக்குரைஞா்கள் சங்கத்தின் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி 25 பழங்குடியின மாணவிகளின் கல்விக்கு வைப்புநிதி வழங்கப்பட்டது. கோவை பெண் வழக்குரைஞா்கள் சங்க வெள்ளி விழா சனிக்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க