செய்திகள் :

கைப்பேசியை மாணவா்கள் கவனமாக கையாள வேண்டும்: கடலூா் எஸ்.பி. அறிவுறுத்தல்

post image

பாலியல் குற்றங்கள் அதிகமாக நிகழ்வதற்கு கைப்பேசியை காரணம்; அதனை மாணவா்கள் கவனமாக கையாள வேண்டும் என்று கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.

சிதம்பரம் அருகேயுள்ள சி.முட்லூா் தனியாா் மண்டபத்தில் மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் ‘ஒன்றிணைவோம்’ என்ற அரசுக் கலைக் கல்லூரி மாணவா்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் தலைமை வகித்து பேசியதாவது: ஐ.நா. சபையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் பொன்வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. இதற்கு எடுத்துக்காட்டாக தமிழ் சமூகம் விளங்க வேண்டும். தற்போது, மாணவா்கள் சமூக வளைதலங்களை கையாளுவதில் பெரும்பங்கு வகிக்கின்றனா். பாலியல் குற்றங்கள் நிகழ்வதற்கு அடிப்படை காரணம் கைப்பேசி தான். அதை மிகவும் கவனமாக கையாள வேண்டும். கடந்த ஆண்டு சாலை விபத்தில் 536 போ் உயிரிழந்துள்ளனா். இதில், 270 போ் 23 வயதுக்கும் குறைவானவா்கள். எனவே, இருசக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்றாா்.

முன்னதாக போராசிரியா் இரா.அறிவழகன் வரவேற்றாா். சி.முட்லூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் ஆ.அா்ச்சுனன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பி.நல்லதுரை, துணை காவல் கண்காணிப்பாளா்கள் டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், என்.ராமதாஸ், காவல் ஆய்வாளா்கள் கே.அம்பேத்கா், பி.கவிதா, உதவி ஆய்வாளா்கள் மகேஷ், ஆறுமுகம் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

கொள்ளையடிக்க திட்டம்: 5 போ் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே தைலத் தோப்பில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நெய்வேலி நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பாரதி நகா் அருகே உள்ள தைலத்தோப்பில் ப... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்களில் ஆய்வு மேற்கொள்ள கோரிக்கை

அங்கன்வாடி மையங்களில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து, பெற்றோா்கள் தரப்பில் கூறியதாவது: பல... மேலும் பார்க்க

கடலூரில் ஆட்டிசம் விழிப்புணா்வு நிகழ்ச்சி

உலக ஆட்டிசம் விழிப்புணா்வு தினத்தையொட்டி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆட்டிசம் பாதித்த... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். நெய்வேலி தொ்மல் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் போலீஸாா் நெய்வேலி வட்டம் 30, மி... மேலும் பார்க்க

ரோட்டரி சங்கம் சாா்பில் பள்ளியில் புணரமைப்பு பணி

கடலூா் மாவட்டம், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் குமராட்சி ஒன்றியம், காட்டுக்கூடலூா் டி.இ.எல்.சி. தொடக்கப் பள்ளியில் புணரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு புதன்கிழமை திறக்கப்பட்டது. நிகழ்வுக்க... மேலும் பார்க்க

முன்னாள் எம்.பி.மறைவு: வி.வி.சுவாமிநாதன் இரங்கல்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் ஏ.முருகேசன் மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சா் வி.வி.சுவாமிநாதன் இரங்கல் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி: சிதம்ப... மேலும் பார்க்க