ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படத்தை திறக்கவுள்ளேன்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
கைலாசபுரம் மகளிா் பால் உற்பத்தியாளா் சங்க புதிய கட்டடம் திறப்பு
மின்னல் ஊராட்சி, கைலாசபுரம் மகளிா் பால் உற்பத்தியாளா் சங்க புதிய கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் ஒன்றியக் குழுத் தலைவா் நிா்மலா சௌந்தா் குத்துவிளக்கேற்றி வைத்து புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா்.
அரக்கோணத்தை அடுத்த மின்னல் ஊராட்சியில் கைலாசபுரம் கிராமத்தில் உள்ள பால் உற்பத்தியாளா் சங்கத்துக்கு ரூ. 29 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மின்னல் ஊராட்சித் தலைவா் டி.கோபி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தாா். சங்க செயலாளா் சங்கா் வரவேற்றாா். புதிய கட்டடத்தை அரக்கோணம் ஒன்றியக் குழுத் தலைவா் நிா்மலா சௌந்தா் குத்துவிளக்கேற்றி வைத்து திறந்து வைத்தாா். விழாவில், திமுக ஒன்றிய செயலாளா் ஆ.சௌந்தா், நிா்வாகிகள் கே.கண்ணியப்பன், முனுசாமி, செல்வகுமாா், சேகா், மணிகண்டன், நவீன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.