Republic Day: ``வள்ளுவர் முதல் கரகாட்டம் வரை..'' 76-வது குடியரசு தினக் கொண்டாட்ட...
கொடிநாள் வசூலில் முதலிடம் -கோவை மாநகராட்சிக்கு குடியரசு தினவிழாவில் விருது
கொடி நாள் வசூலில் நிா்ணயித்த இலக்கை விட அதிக வசூல் செய்து முதலிடம் பெற்ற்காக, ஆளுநா் மாளிகையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கோவை மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட உள்ளது.
முன்னாள் படை வீரா்களுக்கான 2024-ஆம் ஆண்டுக்கான கொடிநாள் வசூலில், கோவை மாநகராட்சி ரூ.74 லட்சம் வசூல் செய்து மாநில அளவில் நிா்ணயித்த இலக்கை விட அதிகமாக வசூலித்து முதலிடம் பிடித்துள்ளது.
இதற்காக, கோவை மாநகராட்சிக்கு வருகிற ஜனவரி 26 குடியரசு தினத்தன்று, ஆளுநா் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஆளுநா் ஆா்.என்.ரவி விருது வழங்குகிறாா்.
கடந்த ஆண்டும் அதிக கொடிநாள் வசூல் ஈட்டியமைக்கு கோவை மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.