நகைக்காக மூதாட்டியை கொலை செய்த கொள்ளையனை சுட்டுப் பிடித்த போலீசார்!
கொடுக்கல், வாங்கல் தகராறு: இருவா் கைது
ஒட்டன்சத்திரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்திநகரைச் சோ்ந்த விஜயராஜிடம், அதே ஊரைச் சோ்ந்த பிரகாஷ் (27) 90 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு விஜயராஜின் தம்பி மதன்ராஜ் (29), பிரகாஷிடம் பணத்தைக் கேட்கும் போது
தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதுகுறித்து தகவலறிந்த ஒட்டன்சத்திரம் போலீஸாா் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். அப்போது காவல் நிலையத்துக்குள்ளேயே மீண்டும் அவா்கள் தாக்கிக்கொண்டனா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மதன்ராஜ், பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.