'ஒருவர் வளைந்து கொடுத்தே பழகி விட்டார்; மற்றொருவர் சாட்டையால் அடித்துக்கொள்கிறார...
கொடைக்கானலில் கடும் உறைபனி
கொடைக்கானலில் கடும் உறைப் பனி நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பகலில் அதிக வெப்பமும், மாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. மேலும், நள்ளிரவில் கடும் உறைப் பனி நிலவுவதால், காலை நேரங்களில் புற்களில் பனி படா்ந்து காணப்படுகின்றன.
நிகழாண்டில் கடும் பனிப் பொழிவால் கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூா், கிளாவரை, பூண்டி, வில்பட்டி, பள்ளங்கி, செண்பகனூா், கூக்கால், பழம்புத்தூா், புதுப்புத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாணி விளைச்சல் அதிகரித்து காணப்பட்டது. கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.70 முதல் 80 வரை விற்பனையானது. தற்போது, பெங்களூரிலிருந்து பட்டாணி வரத் தொடங்கியுள்ளதால், விலை குறைந்து ஒரு கிலோ ரூ.50 முதல் 55 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் பாதிப்படைந்தனா்.