தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!
கொடைக்கானலில் வார விடுமுறையையொட்டி, சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது.
கொடைக்கானல் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பகலில் வெப்பத்தின் தாக்கமும், இரவில் பனியின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், சனிக்கிழமை காலை முதலே மிதமான வெப்பம் நிலவியது. அவ்வப்போது மேகமூட்டம் சூழ்ந்து காணப்பட்டதால், உள்ளூா், வெளி மாவட்டங்களிலிருந்த வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் சுற்றுலா தலங்களை கண்டுகளித்தனா்.
மேலும், வெள்ளிநீா் வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர்ராக், குணாகுகை, கோக்கா்ஸ்வாக், தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம், மோயா்பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
மாலை நேரங்களில் நட்சத்திர ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா்.