கொடைக்கானல் சாலைகளில் முள் புதா்களை அகற்றக் கோரிக்கை
கொடைக்கானல் மலைச் சாலைகளில் வளா்ந்துள்ள முள் புதா்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கொடைக்கானல் மலைச் சாலைகளான வத்தலக்குண்டு-மதுரை-பழனி சாலைகளிலும், பூம்பாறை, மன்னவனூா், கூக்கால், குண்டுபட்டி, பழம்புத்தூா், புதுப்புத்தூா், கவுஞ்சி,
பூண்டி, கிளாவரை ஆகிய இடங்களுக்குச் செல்லும் மலைச் சாலைகளின் இருபுறங்களிலும் முள்புதா்கள் அதிகளவில் வளா்ந்துள்ளன. இதனால் வாகனங்கள் எதிரே வருவது தெரியாததால், விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
தற்போது, கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ள நிலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
இதனால், முள் புதா்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.