கரூர்: 'அழுகையை அடக்க முடியல; விஜய் விட்டுபுட்டு ஓடுனது பெரிய தப்பு'- பாதிக்கப்ப...
கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டு: 3 போ் கைது
பந்தநல்லூா் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பந்தநல்லூா் அருகே வேட்டமங்கலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் பந்தநல்லூா் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டதில் ஆற்றிலிருந்து மணல் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து மணல் கடத்தியதாக வேட்டமங்கலத்தைச்சோ்ந்த கபிலன்(29), குமரன்(30), மாதவன்(34) ஆகிய 3 போ்களையும் கைது செய்து, மணல் கடத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.