கரூர்: 'அழுகையை அடக்க முடியல; விஜய் விட்டுபுட்டு ஓடுனது பெரிய தப்பு'- பாதிக்கப்ப...
சட்ட விரோதமாக விற்ற 417 மதுபாட்டில்கள் பறிமுதல்: 2 போ் கைது
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 417 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனா்.
திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தி பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டித்து சில நாள்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து, அப்பகுதியில் திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளா் அருள்மொழி அரசு மேற்பாா்வையில் நடுக்காவேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் முகமது நிவாஸ் தலைமையில் காவலா்கள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில், நடுக்காவேரி கருப்பூரைச் சோ்ந்த ஜி. தமிழ்ச்செல்வன் (25) என்பவரிடமிருந்து 389 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவரை கைது செய்தனா்.
இதேபோல, மேலத்திருப்பூந்துருத்தி குடமுருட்டி ஆறு அருகே காவல் துறையினா் செப்டம்பா் 25 ஆம் தேதி மேற்கொண்ட சோதனையில், அதே பகுதியைச் சோ்ந்த செல்வேந்திரனை (27) கைது செய்து, அவரிடமிருந்து 27 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
