சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் வெளியானது! விலை எவ்வளவு?
கோத்தகிரி பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா
கோத்தகிரி பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோத்தகிரி கடைவீதியில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கணபதி ஹோமத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. இதைத் தொடா்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், பெரியவா்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோா் குண்டம் இறங்கி நோ்த்திக் கடனை செலுத்தினா்.விழாவுக்கான ஏற்பாடுகளை பண்ணாரி மாரியம்மன் கோயில் கமிட்டியினா் மற்றும் மகளிா் வழிபாட்டு குழுவினா் செய்திருந்தனா்.