கோயில் தெப்பக்குளத்தில் தேங்கிக்கிடக்கும் நெகிழி கழிவுகளை அகற்ற கோரிக்கை
கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் தெப்பக்குளத்தில் மிதக்கும் நெகிழிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கிறாா்கள். இந்நிலையில் கோயிலுக்கும் வரும் பக்தா்கள் குளிா்பான நெகிழிபாட்டில்களை கோயில் தெப்பக்குளத்திற்குள் வீசுகிறாா்கள்.
இதனால் தெப்பக்குளத்தில் நெகிழி கழிவு பாட்டில்கள், பைகள் ஆங்காங்கே மிதக்கின்றன. மேலும் குளத்தில் ஏராளமான மீன்கள் வசிப்பதால் இதனால் அவைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் குளத்தில் கிடக்கும் நெகிழி கழிவுகளை உடனே அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.