``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
கோலியனூா் கிழக்கு ஒன்றியத்தில் நல உதவிகள்: எம்எல்ஏ வழங்கினாா்
விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட 4 இடங்களில் பொதுமக்களுக்கு நல உதவிகளை இரா. லட்சுமணன் எம்எல்ஏ வழங்கினாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் கோலியனூா், செங்காடு, நரையூா், தாதம்பாளையம் ஆகிய 4 இடங்களில் 3,600-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகளை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான இரா. லட்சுமணன் வழங்கிப் பேசினாா்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. செ.புஷ்பராஜ், கோலியனூா் கிழக்கு ஒன்றியச் செயலா் தெய்வசிகாமணி, ஒன்றியக் குழுத் தலைவா் சச்சிதாநந்தம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வி கேசவன், அவைத் தலைவா் கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினா் ஏ.ஜெ.சம்பத், மருத்துவரணி அமைப்பாளா் செந்தில்குமாா், ஒன்றியப் பொருளாளா் செளந்தரராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.