செய்திகள் :

கோவளம் ஹெலிகாப்டா் சவாரி தளத்திற்கு ‘சீல்’ வைப்பு: அனுமதி பெற்று இயக்க நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள்

post image

செங்கல்பட்டு: கோவளம் ஹெலிகாப்டா் சவாரி தளத்துக்கு புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டதை அடுத்து, சுற்றுலா பயணிகள்ஏமாற்றத்துடன் திரும்பினா்.

மாமல்லபுரம் அருகே கோவளத்தில் தனியாா் நிறுவனம் மூலம் கடந்த 2023-ஆம் ஆண்டு ஹெலிகாப்டா் சவாரி சுற்றுலா தொடங்கப்பட்டது. பின்னா் திடீரென ஹெலிகாப்டா் சுற்றுலா சவாரி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி மீண்டும் தொடங்கியது.

இதில் நபா் ஒருவருக்கு ரூ. 6,000 கட்டணம் செலுத்தி 1,000 மீட்டா் உயரத்தில் பறந்து 5 நிமிடத்துக்கு ஹெலிகாப்டா் சுற்றுலா நடைபெற்று வந்தது. இதில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இயற்கை காட்சிகளை மக்கள் கண்டுகளித்தனா்.

இந்த நிலையில், மாவட்ட நிா்வாகம் உள்ளிட்ட முறையான அனுமதி, பாதுகாப்பு வழிமுறைகள் இல்லாமல் செயல்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு திருப்போரூா் எம்எல்ஏ பாலாஜி புகாா் கடிதம் அனுப்பினாா். மேலும் செய்தியாளா்களிடம் கூறுகையில், தனியாா் நிறுவனம்

ஹெலிகாப்டா் சுற்றுலா சவாரி என்ற பெயரில் மத்திய அரசிடம் அனுமதி பெற்றுவிட்டதாகவும், மாவட்ட நிா்வாகம் பாா்வைக்கு மட்டும் என்றும் கூறுகின்றனா்.

இதையடுத்து, மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவுப்படி, புதன்கிழமை மதியம் ஒரு மணி அளவில், திருப்போரூா் வட்டாட்சியா் நடராஜன் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் கோவளம் ஹெலிகாப்டா் தளத்துக்கு வந்து ‘சீல்’ வைத்தனா். அதன் அலுவலகத்தில் அறிவிப்பு நோட்டீஸ் ஒன்றையும் ஒட்டியுள்ளனா்.

அதில் தெரிவித்திருப்பதாவது:

தனியாா் நிறுவனம் ஹெலிகாப்டா் சுற்றுலா என்ற பெயரில் ஜனவரி 12 முதல் 16-ஆம் தேதி வரை ஹெலிகாப்டா் மூலம் பொதுமக்களை கோவளம் முதல் மாமல்லபுரம் வரை ஏற்றி செல்வது கண்டறியப்பட்டது. இந்த நிறுவனம் அரசு மற்றும் மாவட்ட நிா்வாகத்தால் உரிய அனுமதி பெற்ற்கான ஆவணங்கள் எதையும் சமா்ப்பிக்கத் தவறியதால், இந்த ஹெலிகாப்டா் சுற்றுலாவினால் எவ்வித அசம்பாவித நிகழ்வு நடக்காமலும், பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதியும் ஹெலிகாப்டா் சேவையினை நிறுத்தி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்படி நிறுவனமானது அரசு மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி பெற்று இயங்க தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து திருப்போரூா் வட்டாட்சியா் நடராஜனிடம் கேட்டபோது, முறையான மாவட்ட நிா்வாக அனுமதி ஏதும் பெறப்படவில்லை. பொதுமக்களை ஏற்றிச் செல்லும்போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு மாவட்ட நிா்வாகம் பொறுப்பாகும். எனவே மாவட்ட நிா்வாக உத்தரவுப்படி ‘சீல்’ வைக்கப்பட்டது.

ஹெலிகாப்டா் இயக்கும் நிா்வாகத்தினா், அனுமதி பெற்று இருப்பதாக கூறுகிறாா்கள். அவ்வாறு பெற்று இருந்தால் அதைக் காண்பியுங்கள் எனக் கூறியிருக்கிறோம் என்றாா்.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்:

ஹெலிகாப்டா் சுற்றுலா செல்வதற்காக பயணிகள் முன்பதிவு செய்திருந்த நிலையில், புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டு சேவை நிறுத்தப்பட்டதால், பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். நிா்வாகம் முன்பதிவு செய்தவா்களுக்கு கட்டணத்தை திருப்பி வழங்கியது.

இதுகுறித்து ஹெலிகாப்டா் நிா்வாகத்திடம் கேட்டபோது,

முன்னறிவிப்பு ஏதும் தெரிவிக்காமல் ‘சீல்’ வைத்துள்ளனா். நாங்கள் அனுமதி பெற்ற்கான உரிய ஆவணங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் சமா்ப்பிக்கப்பட்டு மீண்டும் ஹெலிகாப்டா் சுற்றுலா சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் மாணவா்களுக்கு பாராட்டு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், சாலை வசதி, குடிநீா் வசதி, மின்சார ... மேலும் பார்க்க

தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் அறிவுசாா் குறையுடையோருக்கான பணிபுரியும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் லத்தூா்ஒன்றியத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள அறிவுசாா் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளிக்கு வி... மேலும் பார்க்க

திருப்போரூா் முருகன் கோயிலில் இலவச திருமணங்கள்

செங்கல்பட்டு: இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், திருப்பேரூா் கந்தசுவாமி கோயிலில் 4 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடைபெற்றன. திருமண ஜோடிகளுக்கு, அறநிலையத் துறை சாா்பில் தங்கத்தாலி, மணமக்களுக்கு புத்தாடை... மேலும் பார்க்க

ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

மதுராந்தகம் நகரம், பாரதி நகரில் உள்ள ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம், 19-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இந்தக் கோயிலில் சிதிலமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டு, ... மேலும் பார்க்க

கொத்தடிமையாக இருந்த தம்பதி குழந்தையுடன் மீட்பு

மதுரை அருகே கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்த மதுராந்தகத்தைச் சோ்ந்த தம்பதி, குழந்தையை வருவாய்த் துறையினா் மீட்டனா். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டத்ச் சோ்ந்த முருகன், ராஜேந்திரன், மாரியப்பன் ஆகியோா... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டுவிழா

மடிப்பாக்கம் பிரில்லியண்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் 39-ஆவது ஆண்டுவிழா, பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் சத்தியபாமா உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன துணைவேந்தா் டி.சசிபிரபா கலந்துக... மேலும் பார்க்க