வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!
கோவா முதல்வரை குற்றஞ்சாட்டிய நடிகர் மீது வழக்கு!
கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவாந்த் மீது குற்றம்சுமத்திய நடிகர் கௌரவ் பக்ஷி மீது அம்மாநில குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவா மாநிலத்தில், உச்ச நீதிமன்ற அறுவுறுத்தல்களை மீறி முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் அவரது அரசு அம்மாநிலத்தின் வனப்பகுதியை அழித்து வருவதாகக் குற்றம்சுமத்தி நடிகர் கௌரவ் பக்ஷி விடியோ ஒன்றை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மக்களிடம் அச்சத்தை உருவாக்க தவறான தகவல்களுடன் விடியோ வெளியிட்டுள்ளதாக, நடிகர் பக்ஷி மீது கடந்த ஜூலை 2 ஆம் தேதி துணை வனப் பாதுகாப்பாளர் ஆதித்யா மதன்பத்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன்மூலம், நடிகர் பக்ஷி மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 353 (1) மற்றும் 196 (1) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து, நடிகர் கௌரவ் பக்ஷி நேற்று (ஜூலை 9) வெளியிட்டுள்ள அறிக்கையில், காடுகள் குறைந்து வருவது குறித்து சமூக ஊடகங்களில் தான் பேசியதற்காக, தன் மீது பொய்யான மற்றும் அற்பமான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இத்துடன், கடந்த ஜூலை 4 ஆம் தேதி காவல் துறை அதிகாரிகள் எந்தவொரு காரணமும் கூறாமல், தனது வீட்டிற்கு வந்து தன்னை விசாரணைக்கு அழைத்ததாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளைக் கடந்த காலத்திலும் தான் சந்தித்தபோது நீதிமன்றங்கள் தன்னைக் காப்பாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், குற்றப்பிரிவு அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையின் நகலைக் கொடுக்க மறுத்தாகக் குற்றம்சாட்டிய அவர், முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
The state's Crime Branch police have registered a case against actor Gaurav Bakshi, who has accused Goa Chief Minister Pramod Sawant.
இதையும் படிக்க: டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தை!